/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
/
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தல்
ADDED : ஏப் 08, 2024 07:21 AM

கும்மிடிப்பூண்டி : திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் தேர்தல் பணி மேற்கொள்ள இருக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. கவரைப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பில், 1452 பேர் பங்கேற்றனர்.
துணை தேர்தல் நடத்தும் அலுவலர் கணேஷ், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
அவர் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி அலுவலர்கள் ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய பணிகள், கவனம் தவறினால் ஏற்படும் சிக்கல்கள், அதனால் ஏற்படும் பாதிப்புகள்.
ஒவ்வொரு வாக்காளரின் விபரங்களை சரிபார்ப்பது முதல், ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் அவர்கள் ஓட்டு போடும் வரை கவனமாக இருக்க வேண்டும். பதிவான ஓட்டுகளை ஒவ்வொரு, 30 நிமிடங்களுக்கு ஒரு முறை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 23 பேர் தங்களின் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.

