/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
என்.டி.ஆர்.எப்., படை நாய்களுக்கு பயிற்சி
/
என்.டி.ஆர்.எப்., படை நாய்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 17, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாலங்காடு, ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை மையம் செயல்படுகிறது.
இங்கு பேரிடர் காலங்களில் கட்டட இடிபாடுகளில் சிக்கிய நபர்களை உயிருடன் மீட்க உதவும் வகையில் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் பொது இடங்களில் மனிதர்களிடம் நட்பு ரீதியாக பழகும் விதத்தில் நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே பயத்தை போக்கும் விதத்தில் நேற்று திருவாலங்காடு ரயில் நிலையத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது
கால்நடை மருத்துவர் சைலேந்திர சிங், மோப்ப நாய்களின் பயிற்சியாளர்கள் ஈஸ்வரராவ் மற்றும் முத்துக்குமார் உடனிருந்தனர்.