/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மின்மாற்றி, மின்கம்பங்கள் மத்துாரில் உடையும் அபாயம்
/
மின்மாற்றி, மின்கம்பங்கள் மத்துாரில் உடையும் அபாயம்
மின்மாற்றி, மின்கம்பங்கள் மத்துாரில் உடையும் அபாயம்
மின்மாற்றி, மின்கம்பங்கள் மத்துாரில் உடையும் அபாயம்
ADDED : மார் 01, 2025 12:25 AM

திருத்தணி,
-திருத்தணி ஒன்றியம் மத்துார்- புச்சிரெட்டிபள்ளி செல்லும் சாலையில், மின்வாரியம் சார்பில் மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்மாற்றியில் இருந்து, 20க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை முறையாக பராமரிக்காததால் தற்போது மின்மாற்றியின் மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. மேலும், மின்மாற்றியில் இருந்து விவசாய மின்மோட்டார்களுக்கு செல்லும், நான்கு மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன.
மின்கம்பங்கள் சிமெண்ட் தளம் பெயர்ந்து வெறும் இரும்பு கம்பிகள் உள்ளதால் பலத்த காற்று அடித்தால் உடைந்து விழும் அபாய நிலை உள்ளது.
சேதமடைந்துள்ள மின்கம்பங்களால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகள் அனைவரும் அச்சத்துடன் பயிரிட வேண்டிய நிலை உள்ளது.
பழுதடைந்த மின்கம்பங்களை, மாற்றி அமைக்க வேண்டும் என பலமுறை விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்கள் மின்வாரியத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.
எனவே விவசாயிகள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுத்து மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.