ADDED : செப் 12, 2024 07:37 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில் தினமும் 50,000 மட்கும் மற்றும் மட்காத குப்பை சேகரிக்கப்படுகிறது. இப்பணியில், 360 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும், வீடு தோறும், தூய்மை பணியாளர்கள் சென்று, மட்கும் மற்றும் மட்காத குப்பையை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில், திருவள்ளூர் இந்தியன் வங்கி சார்பில், 60,000 ரூபாய் மதிப்பில், 60 குப்பை சேகரிக்கும் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதை நகராட்சி தலைவர் உதயமலர் பாண்டியன், கமிஷனர் திருநாவுக்கரசு, சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த தொட்டிகள், துப்புரவு பணியாளர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.