/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆரம்பாக்கத்தில் புறநகர் ரயில்களில் சோதனை
/
ஆரம்பாக்கத்தில் புறநகர் ரயில்களில் சோதனை
ADDED : ஏப் 09, 2024 06:51 AM

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி என்பது ஆந்திர எல்லையை ஒட்டியுள்ள பகுதியாகும்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஆந்திராவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்களை போலீசாரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மறுபுறம், வெடிகுண்டு நிபுணர்கள், 'மெட்டல் டிடெக்டர்' வாயிலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வழிபாட்டு தலங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் வெடி குண்டு சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் மற்றும் ஆரம்பாக்கம் ரயில் நிலையங்களில், ஆரம்பாக்கம் இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில், வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயில்களில், பயணியரின் உடைமைகளை சோதனையிட்டனர்.
தேர்தல் முடியும் வரை தொடர் சோதனைகளில் ஈடுபட இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

