/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நெடுஞ்சாலையில் லாரிகள் அட்டகாசம் நீர்வரத்து கால்வாயில் கழிவுநீர் திறப்பு

ADDED : ஆக 19, 2024 11:26 PM

திருவள்ளூர்: சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தண்டலம், செட்டிபேடு, பாப்பன்சத்திரம் உட்பட பல கிராமங்கள்.
இங்கு குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிற்சாலைகளில் சேகரமாகும் கழிவுநீர் டேங்கர் லாரிகள் மூலம் அப்புறப்படுத்தப்படுகிறது.
அவ்வாறு, டேங்கர் லாரிகளில் ஏற்றி வரப்படும் கழிவுநீரை, சுத்திகரிப்பு நிலையத்திற்கு எடுத்து செல்லாமல், சென்னை - பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை பகுதியில் ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயில் கழிவுநீரை் திறந்து விடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இவ்வாறு ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்துக்கால்வாயில் திறந்து விடப்படும் கழிவுநீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் டேங்கர் லாரிகளை முறையாக ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.