/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
/
போதை மாத்திரை விற்ற இருவர் கைது
ADDED : மே 12, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்:ஆன்லைனில் போதை மாத்திரைகளை, கூடுதல் விலைக்கு விற்ற, மதுரை வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சென்னை, திருமங்கலம் பகுதியில், ஆன்லைனில் பொருட்கள் விற்கும் தளத்தில், போதை மாத்திரைகள் கூடுதல் விலைக்கு விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, திருமங்கலம் உதவி கமிஷனர் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தகவல் அடிப்படையில் மதுரையை சேர்ந்த சங்கர் கணேஷ், 21, கிருஷ்ணா, 22 ஆகிய இருவரையும் பிடித்து சோதித்த போது, அவர்களிடம் போதைக்கு பயன்படுத்தும் மாத்திரைகள் இருந்தது தெரிந்தது. இருவரும் கைது செய்யப்பட்டனர்.