ADDED : செப் 14, 2024 08:25 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மீஞ்சூர்:மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையில் உள்ள சீமவாரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அங்குள்ள பாலத்தின் அருகே, சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த இருவரை பிடித்து விசாரித்து, அவர்களது பைக்கை சோதனை செய்தனர்.
அதில், ஒரு கிலோ, 200 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. விசாரணையில் இருவரும், மீஞ்சூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ், 32, அரக்கோணம் பகுதியை சேர்ந்த மணிகண்டன், 26, என்பதும், அத்திப்பட்டு பகுதியில் உள்ளதனியார் கன்டெய்னர் கிடங்கு ஒன்றில் பணிபுரிந்து வந்ததும் தெரிந்தது.
இவர்கள் ஆந்திராவில் இருந்து கன்டெய்னர் லாரி டிரைவர்கள் உதவியுடன் கஞ்சா கடத்தி வந்து, விற்பனையில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.