ADDED : பிப் 25, 2025 12:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி,
ஆந்திர மாநிலத்தில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளுக்கு கஞ்சா கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, நேற்று, ஆர்.கே.பேட்டை மதுவிலக்கு போலீசார், திருத்தணி அடுத்த, பொன்பாடி சோதனைச்சாவடியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, அரக்கோணம் நோக்கி செல்லும் தனியார் பேருந்தில் போலீசார் சோதனை செய்தபோது, இரண்டு பயணியரின் பைகளில், 5 கிலோ கஞ்சா கடத்தி வந்தது கண்டுபிடித்து, பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், மயிலாடுதுறை மாப்படுக்கை கிராமத்தைச் சேர்ந்த குகன், 22, கிட்டப்பா பாலத்தைச் சேர்ந்த அரவிந்தன், 22, என, தெரிய வந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.