ADDED : மே 04, 2024 09:46 PM
திருத்தணி:திருத்தணி பெரியார்நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி ரமாபிரபா, 54.
இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து மதியம் பஜாருக்கு பொருட்கள் வாங்க அரக்கோணம் சாலையோரமாக நடந்து சென்றார்.
கடும் வெயிலில் திடீரென மயங்கி விழுந்த ரமா பிரபா சம்பவ இடத்திலேயே இறந்தார். திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
l வேலுார் மாவட்டம், ஆற்காடைச் சேர்ந்தவர் தினகரன், 45; கொத்தனார்.
நேற்று முன்தினம், ஆவடி அடுத்த அண்ணனுார், ஸ்ரீசக்தி நகரில் கட்டட வேலைக்கு தினகரன் வந்துள்ளார்.
அப்போது, திடீரென உடல் நிலை பாதிப்பால், வேலை செய்யாமல் பாதியில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
இந்நிலையில், கொளுத்தும் வெயிலில் ஸ்ரீசக்தி நகர் சாலையில் தினகரன் நடந்து சென்றபோது, திடீரென வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.