/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தவர் இருவர் பலி
/
ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தவர் இருவர் பலி
ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தவர் இருவர் பலி
ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநிலத்தவர் இருவர் பலி
ADDED : ஏப் 05, 2024 10:09 PM
திருவொற்றியூர்:ரயிலில் இருந்து தவறி விழுந்த, வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் பலியாகினர்.
திருவொற்றியூர் - விம்கோ ரயில் நிலையங்கள் இடையே, அம்பேத்கர் நகர் அருகே, ரயில்வே தண்டவாளத்தை ஒட்டி, வடமாநில நபர்கள் இருவர் இறந்து கிடப்பதாக, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இரு சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த இருவரின் உடைமைகளை சோதனையிட்டதில், பீஹாரின் தானாபூரில் இருந்து, பெரம்பூர் வரை செல்லும் 'சங்கமித்திரா எக்ஸ்பிரஸ்' ரயிலில் இவர்கள் பயணித்துள்ளனர்.
பின், கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தங்கள் உறவினர்களை பார்க்க, மின்சார ரயிலில் பயணித்த போது, தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இருப்பினும், இறந்த இருவரும் யார் என்பது குறித்து தெரியவில்லை. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

