/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு
/
மயங்கி விழுந்த இருவர் உயிரிழப்பு
ADDED : மார் 04, 2025 07:28 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த டி.சி.கண்டிகையைச் சேர்ந்தவர் நாகபூஷ்ணம், 31. இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி, 23, என்ற மனைவியும், இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட நாகபூஷ்ணம், தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று காலை வீட்டில் இருந்து வெளியே வந்தவர், திடீரென மயங்கி விழுந்தார். அவரது உறவினர்கள் அவரை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
★ திருத்தணி அடுத்த வேலஞ்சேரி ரெட்டிமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமரெட்டி, 70. இவர், நேற்று முன்தினம் மதியம் தனக்கு சொந்தமான பூந்தோட்டத்தில் பூக்களை பறித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். உறவினர்கள் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இந்த இரு சம்பவங்களையும், திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.

