/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
இரண்டு இடங்களில் விபத்து குழந்தை உட்பட இருவர் பலி
/
இரண்டு இடங்களில் விபத்து குழந்தை உட்பட இருவர் பலி
ADDED : ஆக 25, 2024 11:08 PM
சோழவரம: திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கம் அருகில் உள்ள வெள்ளியூரை சேர்ந்தவர் சுதாகர், 25. நேற்று முன்தினம் மாலை, சோழவரம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக, மனைவி ஷர்மிளா மற்றும் ஒன்றரை வயது ஆண் குழந்தை ரோகித் ஆகியோருடன் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
மாரம்பேடு பகுதியில் உள்ள மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையின் இணைப்பு சாலை வழியாக சென்றபோது, பின்னால் வந்த லாரி மோதியது. இதில் மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
தம்பதி காயங்களுடன் உயிர் தப்பினர். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுனரை, செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தேடி வருகின்றனர்.
l அதேபோல், நேற்று முன்தினம் இரவு சோழவரம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாஸ்கர், 32, என்பவர், மீஞ்சூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அருமந்தை அருகே சென்ற போது, திடீரென நிலைதடுமாறி, சாலையோர தடுப்புச்சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
செங்குன்றம் போக்குவரத்து போலீசார் பாஸ்கரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.