தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு

இரு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பதவி உயர்வு


ADDED : ஆக 03, 2026 10:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 03, 2026 10:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில், இரண்டு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்களாக தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கலெக்டர் கவிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிந்து வரும் இரு துணை வட்டார வளர்ச்சி அலவலர்களுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

கடம்பத்துார் ஒன்றிய அலுவலகத்தில், நிர்வாக துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த அகஸ்டின் அருள்ராஜ் மற்றும் சோழவரம் ஒன்றிய அலுவலகத்தில், தணிக்கை துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்த வெங்கடேசன் ஆகிய இருவரும், தற்காலிக வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இதில், அகஸ்டின் அருள்ராஜ் ஆர்.கே.பேட்டை ஒன்றிய அலுவலகத்தில், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலரகவும், வெங்கடேசன் புழல் ஒன்றிய அலுவலகத்தில், வருவாய் ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us