/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உழவன் செயலி பயன்பாடு மாணவியர் விளக்கம்
/
உழவன் செயலி பயன்பாடு மாணவியர் விளக்கம்
ADDED : ஏப் 29, 2024 06:32 AM
திருவாலங்காடு: ராணிப்பேட்டை மாவட்டம் சகாயத்தோட்டம் டான் பாஸ்கோ வேளாண் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவியர், திருவாலங்காடு பகுதியில் கிராமப்புற விவசாய பணி அனுபவ திட்டத்தின் கீழ் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள், உழவன் செயலியின் பயன்பாடு குறித்து திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட விவசாயிகளிடம் விளக்கினர். தமிழக அரசு செயல்படுத்தும் மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் விளக்கினர்.
மேலும், பல்வேறு இடங்களுக்கு சென்று தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களையும், விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைப்பதற்கான வழிமுறைகளையும், 'உழவன் செயலி' வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என, விவசாயிகளிடம் விளக்கினர்.
இதில், 30 விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.

