/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாமாவை கொன்ற வழக்கு 34 ஆண்டுக்கு பின் மச்சான் கைது
/
மாமாவை கொன்ற வழக்கு 34 ஆண்டுக்கு பின் மச்சான் கைது
மாமாவை கொன்ற வழக்கு 34 ஆண்டுக்கு பின் மச்சான் கைது
மாமாவை கொன்ற வழக்கு 34 ஆண்டுக்கு பின் மச்சான் கைது
ADDED : மார் 05, 2025 02:37 AM

ஆவடி:ஆவடி எச்.வி.எப்., குடியிருப்பைச் சேர்ந்தவர் ரஞ்சித் சிங் ராணா, 52. இவரது மனைவி மதுமதி. இவர்களுடன், மதுமதியின் தம்பி பாலாஜி, 17, தங்கி இருந்தார்.
ரஞ்சித் சிங் ராணா, அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து, மதுமதியை அடித்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாலாஜி, மாமாவை கொலை செய்ய திட்டமிட்டனர்.
கடந்த 1991ல் பிப்., 16ம் தேதி, மது போதையில் தகராறில் ஈடுபட்ட ரஞ்சித் சிங் ராணாவின் தலையில் அம்மிக்கல் போட்டு கொலை செய்யப்பட்டார்.
கொலை வழக்கு தொடர்பாக, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரித்தனர். இதில், ரஞ்சித் சிங் ராணாவை கொலை செய்தது, மதுமதி மற்றும் அவரது தம்பி பாலாஜி என தெரிந்தது.
மதுமதி அன்று இரவே கைது செய்யப்பட்ட நிலையில், பாலாஜியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறினர். நீதிமன்றத்தின் உத்தரவின்படி தலைமறைவாக இருந்த பாலாஜியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
தீவிர தேடுதலுக்கு பின், விருதுநகர் மாவட்டத்தில் தலைமறைவாக வாழ்ந்து வருவது தெரிய வந்தது.
தற்போது பாலாஜிக்கு 51 வயதாகிறது. 34 ஆண்டுகளுக்கு பின், இன்ஸ்பெக்டர் தனம்மாள் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.