/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சீரமைக்கப்படாத தரைப்பாலம் நெடியத்தில் விபத்து அபாயம்
/
சீரமைக்கப்படாத தரைப்பாலம் நெடியத்தில் விபத்து அபாயம்
சீரமைக்கப்படாத தரைப்பாலம் நெடியத்தில் விபத்து அபாயம்
சீரமைக்கப்படாத தரைப்பாலம் நெடியத்தில் விபத்து அபாயம்
ADDED : மார் 01, 2025 12:21 AM

பள்ளிப்பட்டு,
பள்ளிப்பட்டு அருகே, உருவாகும் கொசஸ்தலை ஆறு, பெருமாநல்லுார், சொரக்காய்பேட்டை, நெடியம், புண்ணியம் வழியாக பாய்ந்து சென்று பூண்டி நீர்த்தேக்கத்தை அடைகிறது.
இதில், நெடியம் அருகே கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
இந்த தரைப்பாலத்தின் வழியாக பொதட்டூர்பேட்டை, சொரக்காய்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த நெசவாளர்கள், ஆந்திர மாநிலம், சத்திரவாடா, புதுப்பேட்டை, நகரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். அங்கிருந்து, நெசவுக்கு தேவையான பாவு, ஊடை நுால் கட்டுகளை கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தரைப்பாலம், 10 ஆண்டுகளில் நான்கு முறை இடிந்து விழுந்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன் இடிந்த தரைப்பாலம், இதுவரை சீரமைக்கப்படாமல் கிடக்கிறது.
மண்ணரிப்பால் தொடர்ந்து உள்வாங்கும் தரைப்பாலத்தின் மேற்பகுதியில், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு சமன் செய்யப்படுகிறது. இதனால், பாலம் வலுவானதாக இருப்பதாக தோற்றம் அளிக்கிறது. ஆனால், உண்மையில் பாலம் உடைந்து தொங்கிக் கொண்டுள்ளது.
இந்த வழியாக, தற்போது கனரக வாகனங்களுக்கு தடை விதித்து, தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், இருசக்கர வாகனங்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக தொடர்ந்து பயணித்து வருகின்றன.
வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில், பாலத்தையும் முறையாக சீரமைக்க அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.