/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஊத்துக்கோட்டை அரசு பள்ளி வளாகம் படுமோசம்
/
ஊத்துக்கோட்டை அரசு பள்ளி வளாகம் படுமோசம்
ADDED : ஆக 25, 2024 01:47 AM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை உள்ளது.
இங்கு, ஊத்துக்கோட்டை, அனந்தேரி, போந்தவாக்கம், சீத்தஞ்சேரி, தாராட்சி, பாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து, 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். இந்த பள்ளியில் சுற்றுப்புற துாய்மை கேள்விக்குறியாக உள்ளது.
பள்ளி அலுவலகம் முன் பகுதி மட்டும் சுத்தப்படுத்தப்படுகிறது. வகுப்பறைகளின் பின்பகுதியில் கொட்டப்பட்ட காகித கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது.
இதனுடன் மரங்களில் இருந்து கொட்டும் இலைகள் சேர்ந்து விடுகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரங்களில் இந்த கல்வி வளாகம் குடி மையமாக மாறி விடுகிறது.
மர்ம நபர்கள் பீர் குடித்து விட்டு அங்கேயே பாட்டில்களை போட்டுச் செல்கின்றனர். பள்ளி நாட்களில் இதை பார்த்து ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
இந்த பள்ளியை சுற்றி மதில் சுவர் உள்ளது. சில மாணவர்கள் இந்த மதில் சுவரை உடைத்து பள்ளி நேரங்களில் அருகில் உள்ள பெண்கள் விடுதிக்கு செல்ல முயல்கின்றனர்.
பள்ளி வளாக துாய்மையின்மை, மதில் சுவர் உடைத்து மாணவர்கள் வெளியேறுவது, வகுப்பறை நேரங்களில் சில மாணவர்கள் வகுப்பறையை விட்டு சாலையில் திரிகின்றனர். மாவட்ட கலெக்டர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

