/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
/
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
திருப்பாச்சூர் வாசீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக விழா கொடியேற்றம்
ADDED : மே 12, 2024 09:11 PM
திருவள்ளூர்: திருப்பாச்சூர் தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவிலில் இன்று 13ம் தேதி வைகாசி விசாக பெருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் அமைந்துள்ளது தங்காதலி அம்மன் உடனாய வாசீஸ்வரசுவாமி கோவில்.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான இங்கு வைகாசி விசாக பெருவிழா இன்று 13ம் தேதி காலை 9:34 மணிக்குள் மிதுன லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
தொடர்ந்து பஞ்சமூர்த்தி வீதியுலாவும், மாலை சுவாமி ரிஷப வாகனத்தில் திருவீதி உலாவும் நடந்தது.
முன்னதாக நேற்று 12ம் தேதி காலை சொர்ணகாளி அம்மன் உற்சவமும், மாலை விநாயகர் உற்சவமும் நடந்தது.
தினமும் காலை 7:00மணிக்கும் மாலை 6:00 மணிக்கும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா நடைபெறும்.
வரும் 22ம் தேதி வைகாசி விசாகப் பெருவிழா சிறப்பாக நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். 25ம் தேதி காலை கொடியிறக்கத்துடன் வைகாசி திருவிழா நிறைவு பெறும்.