/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தட்டிக்கேட்ட பெண்ணை வெட்டிய வாசினாம்பட்டி இளைஞர் கைது
/
தட்டிக்கேட்ட பெண்ணை வெட்டிய வாசினாம்பட்டி இளைஞர் கைது
தட்டிக்கேட்ட பெண்ணை வெட்டிய வாசினாம்பட்டி இளைஞர் கைது
தட்டிக்கேட்ட பெண்ணை வெட்டிய வாசினாம்பட்டி இளைஞர் கைது
ADDED : மார் 03, 2025 11:51 PM

மப்பேடு, கடம்பத்துார் ஒன்றியம் திருமணிக்குப்பம் வாசினாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி தமிழரசி, 30 - என்பவர், கடம்பத்துார் ஒன்றிய மலைவாழ் மக்கள் சங்க செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இதே பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ், 21. இவரதுமனைவி செல்வி, எட்டு மாதங்களுக்கு முன்இறந்து விட்டார்.
இதற்கு இதே பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர்தான் காரணம் என நினைத்த சுரேஷ், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் அவரது வீட்டிற்கு சென்று குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை, தமிழரசி தட்டி கேட்டுள்ளார்.
இதில் ஆத்திரடைந்த சுரேஷ், அவரை கத்தியால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தமிழரசி, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப்பின், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தமழிரசி கொடுத்த புகாரின்படி வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், நேற்று சுரேஷை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.