ADDED : மே 14, 2024 04:17 AM
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் காய்கறிகள் மொத்த விற்பனை மையமாக கோயம்பேடு சந்தை உள்ளது.
தற்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானாவிலும், காய்கறிகள் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
விவசாயிகளிடம், குறைந்த விலையில் காய்கறிகளை கொள்முதல் செய்துவரும் மொத்த வியாபாரிகள் மற்றும் கமிஷன் ஏஜன்டுகள், அவற்றை கூடுதல் விலையில் விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பலவகை காய்கறிகளின் விலை 100 முதல் 200 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அதிகபட்சமாக, நேற்று 1 கிலோ கேரட் 200 ரூபாய்க்கும், பீன்ஸ் 180, பச்சை மிளகாய் 120, அவரைக்காய் 130, பீட்ரூட் 160, இஞ்சி 150, எலுமிச்சை 160, கத்தரிக்காய் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

