ADDED : ஏப் 08, 2024 07:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி, : திருவள்ளூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.
ஆந்திர எல்லையை ஒட்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் உள்ள மாநில எல்லையோர தமிழக சோதனைச்சாவடியில், போலீசாரும் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து, தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி., கிரியாசக்தி மேற்பார்வையில், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள், தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்படுகின்றன.

