/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மேலப்பூடி கிராம சாலையை அசுர வேகத்தில் கடக்கும் வாகனங்கள்
/
மேலப்பூடி கிராம சாலையை அசுர வேகத்தில் கடக்கும் வாகனங்கள்
மேலப்பூடி கிராம சாலையை அசுர வேகத்தில் கடக்கும் வாகனங்கள்
மேலப்பூடி கிராம சாலையை அசுர வேகத்தில் கடக்கும் வாகனங்கள்
ADDED : ஜூன் 17, 2024 02:56 AM

பள்ளிப்பட்டு, : திருவள்ளூர் மாவட்டம், தச்சூர் கூட்டு சாலையில் இருந்து, ஆந்திர மாநிலம், சித்துார் வரை ஆறுவழி சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதில், பள்ளிப்பட்டு அருகே, கீழப்பூடி பகுதியில் ஆறுவழி சாலை பணிக்காக மண் கொட்டும் பணியில் கனரக வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.
இதில், பெருமாநல்லுாரில் இருந்து மேலப்பூடி செல்லும் கிராம சாலை வழியாக பகுதிவாசிகள் பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கிராம சாலையின் குறுக்காக கனரக வாகனங்கள் அசுர வேகத்தில் பயணித்து வருகின்றன. இதனால், இந்த வழியாக பயணிக்கும் பகுதிவாசிகள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.
இந்த வழியாக, பெருமாநல்லார் காலனியை சேர்ந்த மாணவர்கள், மேலப்பூடி அரசு நடுநிலை பள்ளி மற்றும் சொரக்காய்பேட்டை மேல்நிலை பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
பகுதிவாசிகள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த கிராம சாலையை கடக்கும் கனரக வாகனங்கள் மெதுவாக செல்லும் விதமாக, பேரி கார்டுகள் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.