/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற வெங்கத்துார் வாலிபர் கைது
/
எஸ்.ஐ.,யை வெட்ட முயன்ற வெங்கத்துார் வாலிபர் கைது
ADDED : செப் 14, 2024 08:18 PM
கடம்பத்துார்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் வெங்கத்துார் பகுதியில் உள்ள காவல் சோதனைச் சாவடியில் மணவாளநகர் காவல் உதவியாளர் கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு சந்தேகத்தின் பேரில் நடந்து வந்து கொண்டிருந்த நபரை விசாரிக்க முயன்றபோது அந்த நபர் அரிவாளை எடுத்து காவல் உதவி ஆயவாளரை வெட்ட முயன்றார்.
இதில் தப்பிய உதவி ஆய்வாளர் கர்ணன் அந்த நபரை போலீசார் உதவியுடன் பிடித்து விசாரணை நடத்தினார்.
விசாரணையில் அவர் வெங்கத்துார் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த அன்பரசன் (என்ற) அன்பு, 28 என்பதும் அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது தெரிந்தது.
மணவாளநகர் போலீசார் அன்புவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.