/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
/
ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ஓபசமுத்திரம் கிராம மக்கள் குடிநீர் கேட்டு சாலை மறியல்
ADDED : மே 01, 2024 10:07 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் அருகே உள்ளது, ஓபசமுத்திரம் கிராமம். பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பகுதி என்பதால், நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கும்.
அதனால், நத்தம் கிராமத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அங்கிருந்து கூட்டு குடிநீர் திட்டம் வாயிலாக ஓபசமுத்திரம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஓபசமுத்திரம் ஊராட்சியில் மோட்டார் பழுதானதால், கடந்த மூன்று நாட்களாக சீரான குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் சிரமத்தை சந்தித்து வந்தனர்.
இதையடுத்து, ஆத்திரமடைந்த கிராம மக்கள், நேற்று காலை அங்குள்ள பிள்ளையார் கோவில் எதிரே சுண்ணாம்புகுளம் -- கள்ளூர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஆரம்பாக்கம் போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர்.
உடனடியாக தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதாக போலீசாரிடம், ஊராட்சி நிர்வாகம் உறுதி அளித்தது. அதன்பின், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராமத்தினர் கலைந்து சென்றனர்.

