/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
3 கிராமங்களுக்கு தனி ஊராட்சி கேட்டு மீஞ்சூரில் கிராமவாசிகள் போராட்டம்
/
3 கிராமங்களுக்கு தனி ஊராட்சி கேட்டு மீஞ்சூரில் கிராமவாசிகள் போராட்டம்
3 கிராமங்களுக்கு தனி ஊராட்சி கேட்டு மீஞ்சூரில் கிராமவாசிகள் போராட்டம்
3 கிராமங்களுக்கு தனி ஊராட்சி கேட்டு மீஞ்சூரில் கிராமவாசிகள் போராட்டம்
ADDED : ஆக 16, 2024 11:18 PM

மீஞ்சூர் : மீஞ்சூர் ஒன்றியம், ஆலாடு ஊராட்சியில் உள்ள புலிக்குளம், ஆத்ரேயமங்களம் ஆகிய கிராமங்களையும், அனுப்பம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட உத்தண்டிகண்டிகை கிராமத்தையும் ஒன்றிணைத்து புதிய ஊராட்சி ஏற்படுத்த வேண்டும் என நேற்று முன்தினம் நடந்த கிராமசபையில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மேற்கண்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வலியுறுத்தினர். கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்ற அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த கிராமவாசிகள் நேற்று மீஞ்சூர் பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் உறுதி
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
அனுப்பம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும், உத்தண்டிகண்டிகை கிராமத்திற்கும், 3 கி.மீ., தொலைவு உள்ளது. அதேபோன்று புலிக்குளம், ஆத்ரேயமங்கலம் கிராமங்களுக்கும், ஆலாடு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கும், 8 கி.மீ., தொலைவு உள்ளது.
தேர்தல் நேரங்களில் ஓட்டுப்போடவும் நீண்டதுாரம் செல்ல வேண்டி உள்ளது. அரசு திட்டங்கள், அடிப்படை பிரச்னைகள் உடனுக்குடன் கிடைப்பதில்லை. எங்கள் மூன்று கிராமங்களையும் ஒன்றிணைத்து புதிய ஊராட்சி அமைத்திட வேண்டும்
இவ்வாறு கூறினர்.
பி.டி.ஓ., அலுவலக அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். சிறப்பு கிராமசபை கூட்டம் நடத்தி இதுதொடர்பாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றித்தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டர்வர்கள் கலைந்து சென்றனர்.
குடிநீர் தட்டுப்பாடு
பொன்னேரி அடுத்த கடப்பாக்கம் மேல்காலனி கிராமத்தில், 100க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு சீரான குடிநீர் வினியோகம் இல்லை.
வினியோகிக்கப்படும் குடிநீர் உவர்ப்பாக இருப்பதால், அதை பயன்படுத்த முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குடிதண்ணீருக்காக, கடப்பாக்கம் மேல்காலனி கிராமத்தில் சுத்திகரிப்பட்ட குடிநீர் மையம் அமைத்து தரவேண்டும் என கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில், நேற்று கிராமவாசிகள் மீஞ்சூர் - வஞ்சிவாக்கம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மீஞ்சூர் ஒன்றிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
கிராமவாசிகளின் கோரிக்கை மீது, இரண்டு நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதிகாரிகளின் உறுதிமொழியை ஏற்று, சாலை மறியல போராட்டத்தை கைவிட்டு, கிராமவாசிகள் கலைந்து சென்றனர்.