/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தொழில் பழகுனர் பயிற்சி சி.எம்.டி.ஏ., அழைப்பு
/
தொழில் பழகுனர் பயிற்சி சி.எம்.டி.ஏ., அழைப்பு
ADDED : ஏப் 28, 2024 06:43 AM
சென்னை, : சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கட்டுமான பொறியாளர்கள், கட்டட வடிவமைப்பாளர்கள், நகரமைப்பு வல்லுனர்கள் வரிசையில் சட்டப்படிப்பு மாணவர்களுக்கும் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதன்படி, மூன்றாண்டு சட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு முடித்தவர்கள் மற்றும் ஐந்து ஆண்டு சட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு முடித்தவர்களுக்கு, இரண்டுமாதம் தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். இதற்காக அவர்களுக்கு மாதம், 8,000 ரூபாய் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இதே போன்று, மூன்று மற்றும், ஐந்து ஆண்டு சட்ட படிப்புகளை முழுமையாக முடித்தவர்களுக்கு, ஓராண்டு தொழில் பழகுனர் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு மாதம், 10,000 ரூபாய் வீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர் சி.எம்.டி.ஏ.,வின், www.cmdachennai.gov.in இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, மே, 10க்குள் அனுப்பலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவும், கூடுதல் விபரங்கள் பெறவும், internships.cmda@gmail.com என்ற இ மெயில் முகவரியில் அணுகலாம் என சி.எம்.டி.ஏ., அறிவித்துள்ளது.

