/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லை
/
வாக்காளர் அட்டை இருந்தும் பட்டியலில் பெயர் இல்லை
ADDED : ஏப் 19, 2024 09:36 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதியில் மொத்தம், 330 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. நேற்று காலை ஆர்வமுடன் ஓட்டு போட சென்ற மக்களில் பலர், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.
சொந்த வீட்டில் நிலையான முகவரியில் பல ஆண்டுகளாக வசித்து, பல தேர்தலில் ஓட்டு போட்டவர்களுக்கு இந்த லோக்சபா தேர்தலில் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டது.
இது குறித்து ஜெகதீஷ், 46 கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வழி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ.வி.எம்., நகரில் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த, 2021 தேர்தலில் எனது மனைவி சரசு பிரபா, மகள் சாருநிவேதா ஆகியோர் தேர்வழி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஓட்டு போட்டோம். இம்முறை எனது பெயரும், எனது மனைவி பெயரும் வாக்காளர் பட்டியலில் இல்லை. இது குறித்து கேட்டபோது முறையாக ஒருவரும் பதிலளிக்கவில்லை.
ஜெகதீஸ்வரி, 45 கூறியதாவது:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் கிராமத்தில் சொந்த வீட்டில் வசித்து வருகிறேன். அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், கடந்த 2021 சட்டசபை தேர்தலில் ஓட்டு போட்டேன். இம்முறை எனது பெயர் பட்டியலில் இல்லை என வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இது குறித்து கேட்டபோது, பல இடங்களில், ஏராளமானோரின் பெயர், வாக்காளர் பட்டியலில் வரவில்லை என அலட்சியமாக பதிலிளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

