/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
/
கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
கரடிபுத்துாரில் குவாரிக்கு எதிர்ப்பு வாக்காளர் அட்டை ஒப்படைப்பு
ADDED : மார் 01, 2025 12:38 AM

கும்மிடிப்பூண்டி,கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே கரடிபுத்துார் கிராமத்தில், கள்ளாங்குத்து வகையை சேர்ந்த, ஐந்து ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது.
அந்த நிலத்தில், அரசு சார்பில், தனியாருக்கு கிராவல் குவாரி விடப்பட்டது.
ஏற்கனவே கரடிபுத்துார் கிராமத்தில் குவாரி விடக்கூடாது என கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக விடப்பட்ட குவாரிக்கு கரடிப்புத்துார் கிராம மக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி, குவாரி விடப்பட்ட இடத்தில், கிராவல் மண் எடுக்க வந்த பொக்லைன் எந்திரம் மற்றும் லாரிகளை கிராம மக்கள் சிறைப்பிடித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நேற்று ரேஷன் கார்டு, வாக்காளர் மற்றும் ஆதார் அடையாள அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தை கிராம மக்கள் மேற்கொண்டனர்.
வீதியில், 180க்கும் மேற்பட்டோர், கையில் அடையாள அட்டைகளை ஏந்தியபடி, வி.ஏ.ஓ., அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தியபின், அனைவரது அடையாள அட்டைகளையும் வி.ஏ.ஓ., ஜான் பிரிட்டோவிடம் ஒப்படைத்தனர். கும்மிடிப்பூண்டி தாசில்தார் ராஜேந்திரன், இன்று கிராம மக்கள் மத்தியில் சமாதான பேச்சு நடத்த உள்ளார்.