/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய்களை உடைக்கும் நெ.துறை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டிப்பு
/
குழாய்களை உடைக்கும் நெ.துறை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டிப்பு
குழாய்களை உடைக்கும் நெ.துறை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டிப்பு
குழாய்களை உடைக்கும் நெ.துறை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டிப்பு
ADDED : செப் 12, 2024 02:33 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை நிரந்தரமாக தீர்ப்பதற்கு, 110 கோடி ரூபாயில் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகளை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மேற்கொண்டுள்ளது.
தற்போது, 90 சதவீதம் பணிகள் முடிந்த நிலையில், 21 வார்டுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளன. மேலும், தற்போது குடிநீர் குழாய்களில் சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில், திருத்தணி நெடுஞ்சாலை துறையினர், குடிநீர் வாரிய அதிகாரிகளுக்கு எவ்வித அறிவிப்பு கொடுக்காமல், சிறுபாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதனால், நெடுஞ்சாலை துறையினர் கூட்டுக்குடிநீர் செல்லும் பிரதான குழாய்களை சேதப்படுத்தி, தண்ணீர் வீணாகி வருகிறது.
உதாரணமாக, திருத்தணி - சித்துார் சாலை, தனியார் திருமணம் அருகே, சாலை விரிவாக்கத்திற்கு பின் சிறுபாலம் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலை துறையினர் சில நாட்களாக செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் அதிகாலை சிறுபாலத்தின் அருகே பொக்லைன், இயந்திரம் மூலம் நெடுஞ்சாலை துறையினர் பள்ளம் தோண்டிய போது, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய் உடைந்ததால், பல ஆயிரம் கன அடி குடிநீர் வீணாகியது.
கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரி கூறியதாவது:
குடிநீர் குழாய்களை, நெடுஞ்சாலை துறையினர் பராமரிப்பு பணிகள் மற்றும் விரிவாக்கத்திற்காக அடிக்கடி உடைக்கின்றனர்.
நெடுஞ்சாலை துறையினர், சாலை தோண்டும்போது, குடிநீர் குழாய் உடைந்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.