/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
/
குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
ADDED : பிப் 24, 2025 03:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவடி:ஆவடி மாநகராட்சி, பட்டாபிராம், 19வது வார்டு சாலையில், இரண்டு தெருக்களில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இங்குள்ள சாலையோரத்தில், சில ஆண்டுகளுக்கு முன் குழாய் புதைக்கப்பட்டு, 200 மீட்டர் தொலைவில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து, பகுதிவாசிகளுக்கு தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், சில மாதங்களாக, 'வால்வு' மற்றும் குழாய் உடைப்பு காரணமாக வீணாகும் குடிநீர், அருகில் உள்ள கால்வாயில் கலந்து வீணாகிறது.
இதுகுறித்து கவுன்சிலரிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், உடைந்த குழாயை சீரமைக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.

