/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி குழாய் பழுதால் வீணாகும் தண்ணீர்
/
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி குழாய் பழுதால் வீணாகும் தண்ணீர்
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி குழாய் பழுதால் வீணாகும் தண்ணீர்
பராமரிப்பில்லாத குடிநீர் தொட்டி குழாய் பழுதால் வீணாகும் தண்ணீர்
ADDED : பிப் 22, 2025 01:32 AM

இருளஞ்சேரி:கடம்பத்துார் ஒன்றியம் பேரம்பாக்கம் அடுத்துள்ளது இருளஞ்சேரி ஊராட்சி. இங்கிருந்து பேரம்பாக்கம் செல்லும் நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள ஆண்கள் சுகாதார வளாகம் அருகே, 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது.
இந்த குடிநீர் தொட்டி பராமரிப்பில்லாததால் குழாய் பகுதி சேதமடைந்து குடிநீர் கடந்த ஒரு மாதமாக வீணாகி வருவதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இவ்வாறு வீணாகும் குடிநீர் இப்பகுதியில் குளம்போல் தேங்கி நிற்பதோடு இந்த குடிநீர் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீர் கலந்து செல்வதால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் பகுதிவாசிகள் தெரிவித்தனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் ஆய்வு செய்து மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டுமென இருளஞ்சேரி பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.