/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வடமங்கலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
/
வடமங்கலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
வடமங்கலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
வடமங்கலம் நெடுஞ்சாலையில் குழாய் உடைந்து குடிநீர் வீண்
ADDED : ஜூலை 31, 2024 10:23 PM

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியிலிருந்து வயலுார் வழியாக, வடமங்கலம் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது. இந்த நெடுஞ்சாலையில் வயலுார் - கிளாய் வரை உள்நெடுஞ்சாலையில், வயலுார் ஊராட்சிக்கு வரும் குழாய் சேதமடைந்து கடந்த சில மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
சேதமடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க, வயலுார் ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது, பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சாலை சேதமடைந்துள்ளதால், இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதை தடுக்கவும், சாலையை சீமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வயலுார் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.