/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
தடுப்பு அமைத்து என்ன பயன்? தலக்காஞ்சேரியில் குப்பை குவியல்
/
தடுப்பு அமைத்து என்ன பயன்? தலக்காஞ்சேரியில் குப்பை குவியல்
தடுப்பு அமைத்து என்ன பயன்? தலக்காஞ்சேரியில் குப்பை குவியல்
தடுப்பு அமைத்து என்ன பயன்? தலக்காஞ்சேரியில் குப்பை குவியல்
ADDED : ஆக 16, 2024 12:18 AM

திருவள்ளூர்:
தலக்காஞ்சேரி குப்பை கிடங்கில், குப்பை கொட்டுவதை தவிர்க்க தடுப்பு அமைத்தும், அதை ஒட்டியே தொடர்ந்து குப்பை கொட்டி வருவதால், பகுதிவாசிகள் கடும் அவதிப்படுகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்களில், 16,525 வீடு, கடை, ஹோட்டல், வணிக வளாகங்கள் உள்ளன.
இங்கிருந்து நாள்தோறும், 35,000 கிலோ மட்கும் மற்றும் மட்காத குப்பை வெளியேற்றப்படுகிறது. குப்பையை அகற்ற, தனியார் நிறுவன ஊழியர்கள், வீடுதோறும் சென்று குப்பையை தரம் பிரித்து வாங்குகின்றனர்.
இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பையை, நுங்கம்பாக்கத்தில் உள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் கட்டப்பட்டுள்ள கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.
ஆனால், சில ஊழியர்கள் தலக்காஞ்சேரி குப்பை கிடங்கிலேயே கொட்டி வருகின்றனர். ஏற்கனவே, மழை போல் குவிந்த குப்பையை, 'பயோமைனிங்' முறையில் பாதியளவு அகற்றப்பட்ட நிலையில், மீதமுள்ள குப்பை அப்படியே உள்ளது.
இந்த நிலையில், மேற்கொண்டு அங்கு கொட்டப்படும் குப்பை கழிவால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அதை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவ்வப்போது குப்பையை சிலர் தீ வைத்து எரிப்பதால் ஏற்படும் புகை மூட்டத்தால், குடியிருப்பு வாசிகள் மற்றும் அருகில் தனியார், நகராட்சி பள்ளி மாணவ, -மாணவியருக்கு ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறு ஏற்படுகிறது.
ஆறு மாதங்களுக்கு முன், தலக்காஞ்சேரி குப்பை கிடங்கைச் சுற்றிலும், குப்பை கொட்டாத வகையில், தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இருப்பினும், துப்புரவு ஊழியர்கள், அந்த தடுப்பு அருகிலேயே தொடர்ந்து குப்பையை குவித்து வருகின்றனர்.
எனவே, நகராட்சி கமிஷனர் மற்றும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

