/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அத்தமஞ்சேரி - காட்டூர் சாலை சீரமைக்கும் பணிகள் எப்போது?
/
அத்தமஞ்சேரி - காட்டூர் சாலை சீரமைக்கும் பணிகள் எப்போது?
அத்தமஞ்சேரி - காட்டூர் சாலை சீரமைக்கும் பணிகள் எப்போது?
அத்தமஞ்சேரி - காட்டூர் சாலை சீரமைக்கும் பணிகள் எப்போது?
ADDED : மார் 10, 2025 11:52 PM

பொன்னேரி, பொன்னேரி அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தில் இருந்து அத்தமஞ்சேரி வழியாக, காட்டூர் செல்லும் ஏரிக்கரை சாலை, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இச்சாலை முழுதும் பள்ளங்கள் ஏற்பட்டும், கற்கள் பெயர்ந்தும் கிடக்கிறது. மேலும், சாலையில் மண் குவிந்து புழுதி பறக்கிறது.
காட்டூர், திருவெள்ளவாயல் அத்தமஞ்சேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பொன்னேரி செல்வோரும், ரெட்டிப்பாளையம், மனோபுரம் ஆகிய கிராமங்களில் இருந்து மீஞ்சூர் செல்வோரும், இச்சாலையில் கடும் சிரமத்துடன் பயணித்து வருகின்றனர்.
இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை பள்ளங்களில் தடுமாற்றத்துடன் பயணித்து சிறு சிறு விபத்துகளில் சிக்கி தவிக்கின்றனர்.
கரடு முரடாகவும், பள்ளங்கள் ஏற்பட்டும் காணப்படும் இச்சாலையை சீரமைக்க, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.