/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் பிரசாரம் ஜெயகுமார் ஒதுங்கியது ஏன்?
/
திருவள்ளூரில் பிரசாரம் ஜெயகுமார் ஒதுங்கியது ஏன்?
ADDED : ஏப் 05, 2024 12:21 AM
திருவள்ளூர், திருவள்ளூர் எம்.பி.,யாக இருக்கும் காங்கிரசின் ஜெயகுமார், லோக்சபா தேர்தலில் மீண்டும் போட்டியிட, கட்சி தலைமையிடம் 'சீட்' கேட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு இருந்த எதிர்ப்பு அலையால், கர்நாடகா காங்., வெற்றிக்கு பாடுபட்ட முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு, டில்லி தலைமை வாய்ப்பு அளித்தது.
சசிகாந்த் செந்தில் வேட்புமனு தாக்கல், அவர் மேற்கொள்ளும் பிரசாரம் உள்ளிட்ட எந்த கட்சி பணியிலும், ஜெயகுமார் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்தார்.
சீட்டு கிடைக்காத அதிருப்தியில் இருந்த அவர், நேற்று முன்தினம் தன் முகநுால் பக்கத்தில், தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்வது குறித்து பதிவிட்டுள்ளார்.
அந்த பிரசார நிகழ்ச்சி பட்டியலில், கிருஷ்ணகிரி தொகுதியில் ஏப்., 5, 6; மயிலாடுதுறையில் ஏப்., 7, 8; சிவகங்கையில் ஏப்., 11 - 14 ஆகிய நாட்களில் பிரசாரம் செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஆனால், சொந்த தொகுதியான திருவள்ளூரில் பிரசாரம் செய்யாமல் புறக்கணித்துள்ளார்.
அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறுகையில், 'மீண்டும் சீட்டு கிடைக்காததால், திருவள்ளூர் தொகுதியில் பிரசாரம் செய்ய அவர் விரும்பவில்லை. அதனால், காங்., போட்டியிடும் கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, சிவகங்கை வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளார்' என்றனர்.
ஜெயகுமாரது முகநுால் பதிவில், 'திருவள்ளூர் தொகுதியில், தவறுகளுக்காக என்னால் தண்டிக்கப்பட்ட சிலர், என் மீது சேற்றை வாரி இறைத்தனர் என்பதை நான் அறிவேன். அவை அத்தனையும் எனக்கு அளித்த வாழ்த்துகள்' என, காட்டமாக தெரிவித்துள்ளார்.

