/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெரியபாளையம், ஊத்துக்கோட்டையில் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படுமா?
/
பெரியபாளையம், ஊத்துக்கோட்டையில் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படுமா?
பெரியபாளையம், ஊத்துக்கோட்டையில் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படுமா?
பெரியபாளையம், ஊத்துக்கோட்டையில் தானியங்கி சிக்னல்கள் இயக்கப்படுமா?
ADDED : ஏப் 25, 2024 09:53 PM
ஊத்துக்கோட்டை:சென்னை - - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஜனப்பன்சத்திரம், கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகள் உள்ளன. சென்னையில் இருந்து நாகலாபுரம், பிச்சாட்டூர், நகரி, ரேணிகுண்டா, திருப்பதி, கடப்பா, கர்நுால் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள் இச்சாலை வழியே செல்கின்றன.
தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இச்சாலை வழியே பயணிக்கின்றன. போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், வாகன விபத்துக்களை தடுக்க, பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் தானியங்கி சிக்னல் அமைக்கப்பட்டது. இதனால் இப்பகுதிகளில் விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் பெரியபாளையம், ஊத்துக்கோட்டை ஆகிய பகுதிகளில் போடப்பட்ட தானியங்கி சிக்னல் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதேபோல், பெரியபாளையம் - ஆவடி சாலையில் தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலையில் போடப்பட்ட தானியங்கி சிக்னலும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை.
எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், தாமரைப்பாக்கம் கூட்டுச்சாலை ஆகிய இடங்களில் போடப்பட்ட தானியங்கி சிக்னல்களை இயக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

