/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மரிகுப்பம் கோவில் குளம் துார் வாரப்படுமா?
/
மரிகுப்பம் கோவில் குளம் துார் வாரப்படுமா?
ADDED : ஆக 25, 2024 01:50 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வீரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்டது மரிகுப்பம் கிராமம். இந்த கிராமத்தில் வீடுகளின் எண்ணிக்கைக்கு இணையாக கோவில்களும் உள்ளன.
கிராமத்தின் தெற்கில், வி.பி.ஆர்.புரம் சாலையில், விநாயகர் கோவில், மேற்கில் உள்ள குளக்கரையில் மூன்று அம்மன் கோவில்கள், தென்மேற்கில் மற்றும் ஒரு அம்மன் கோவில், கிருஷ்ணர் கோவில் என ஏராளமான கோவில்கள் உள்ளன.
கிராமத்தினர் பெரும்பாலானோர், கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வசித்து வருகின்றனர். திருவிழா மற்றும் வீட்டு விசேஷங்களுக்கு சொந்த ஊருக்கு வருகின்றனர். மேற்கில் உள்ள குளக்கரையில், மூன்று அம்மன் கோவில்கள் மற்றும் கிராம தேவதை கோவில்கள் உள்ளன.
இந்த குளத்திற்கு, காப்புக்காட்டில் இருந்து நீர்வரத்து உள்ளது. இதனால், ஆண்டு முழுதும் இந்த குளம் வற்றாமல் வளமாக காணப்படுகிறது.
ஆனால், குளத்தை துார் வாரி பராமரிக்காததால், குட்டையாக காணப்படுகிறது. குளத்தின் படித்துறைகளும் சேதம் அடைந்துள்ளன.
இதனால், பகுதிவாசிகள் மற்றும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். குளத்தை துார் வாரி சீரமைக்கவும், படித்துறையை வலுப்படுத்தவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

