/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மடுகூர் தரைப்பாலம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
/
மடுகூர் தரைப்பாலம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
ADDED : பிப் 24, 2025 02:23 AM

ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், வெள்ளாத்துார் வழியாக, மடுகூர் கிராமத்திற்கு தார் சாலை வசதி உள்ளது. இந்த மார்க்கத்தில், வெள்ளாத்துார் அருகே, ஓடை ஒன்று குறுக்கிடுகிறது.
அந்த ஓடை மீதான தரைப்பாலம், நான்கு ஆண்டுகளுக்கு முன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால், இந்த வழியாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மடுகூர், அம்மனேரி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆர்.கே.பேட்டை அரசு பள்ளிக்கு வரும் மாணவர்கள் அவதிப்பட்டு வந்தனர். 2013ல் மீண்டும் தரைப்பாலம் கட்டும் பணி துவங்கியது.
மந்தகதியில் கட்டப்பட்டு வந்த இந்த தரைப்பாலம், இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், முறையான இணைப்பு சாலை அமைக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், தரைப்பாலத்தை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவர்கள் மற்றும் பகுதிவாசிகளின் நலன் கருதி இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.