/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
விஜயராகவபுரம்- - மேலப்பூடி இடையே கொசஸ்தலையில் பாலம் அமையுமா?
/
விஜயராகவபுரம்- - மேலப்பூடி இடையே கொசஸ்தலையில் பாலம் அமையுமா?
விஜயராகவபுரம்- - மேலப்பூடி இடையே கொசஸ்தலையில் பாலம் அமையுமா?
விஜயராகவபுரம்- - மேலப்பூடி இடையே கொசஸ்தலையில் பாலம் அமையுமா?
ADDED : செப் 02, 2024 11:09 PM

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், விஜயராகவபுரம் கிராமம், கொசஸ்தலை ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில், பழமையான சிவன் மற்றும் பெருமாள் கோவில்கள் அமைந்துள்ளன.
இந்த கோவில்களுக்கு கொசஸ்தலை ஆற்றின் தெற்கு கரையில் உள்ள மேலப்பூடி, சொரக்காய்பேட்டை, தொட்டிபாளையம், பெருமாநல்லுார் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கொசஸ்தலை ஆற்றை கடக்க பாலம் இல்லாததால், 10 கி.மீ., துாரம் மாற்றுப்பாதையில் பள்ளிப்பட்டு வழியாக செல்ல வேண்டியுள்ளது. மேலப்பூடியில் இருந்து 300 மீ., தொலைவில் விஜயராகவபுரம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஜயராகவபுரத்தில் இருந்து கொசஸ்தலை ஆறு வரை தார் சாலை போடப்பட்டுள்ளது. ஆனால் பாலம் மட்டும் கட்டப்படவில்லை. இந்த சாலை வழியாக டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகள் மட்டும் ஆற்றை கடந்து பயணிக்கின்றன. பாதசாரிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.