/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கடம்பத்துார் - கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்கப்படுமா?
/
கடம்பத்துார் - கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்கப்படுமா?
கடம்பத்துார் - கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்கப்படுமா?
கடம்பத்துார் - கிளாம்பாக்கம் நேரடி பேருந்து இயக்கப்படுமா?
ADDED : ஏப் 08, 2024 07:14 AM
கடம்பத்துார்: கடம்பத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு தென்மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.
இவர்கள் விடுமுறை நாட்களிலோ அல்லது அவசர பயணமாகவோ தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல கடம்பத்துாரிலிருந்து நேரடியாக பேருந்து இல்லாததால், திருவள்ளூர் அல்லது பூந்தமல்லி சென்று கோயம்பேடு செல்லும் பேருந்துகளை பயன்படுத்தி தென் மாவட்டங்களுக்கு சென்று வந்தனர்.
இந்நிலையில், தற்போது கோயம்பேடு பேருந்து நிலையம், கிளாம்பாக்கம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால், கடம்பத்துாரிலிருந்த கிளாம்பாக்கம் பகுதிக்கு நேரடி பேருந்து சேவை இல்லாததால் பயணியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து கடம்பத்துாரைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
கடம்பத்துாரிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு நேரடி பேருந்து இல்லை. இதனால் ஷேர் ஆட்டோக்களில் திருவள்ளூர் சென்று அங்கிருந்து பூந்தமல்லி சென்று கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்.
அல்லது கடம்பத்துாரிலிருந்து மின்சார ரயில் மூலம் சென்னை சென்று அங்கிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் மூலம் வண்டலுார் சென்று கிளாம்பாக்கம் செல்ல வேண்டும்.
இதனால் பணவிரயம், காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, கடம்பத்துாரிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

