நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே, வெங்கடாபுரம் ஊராட்சி, அருந்ததியர் காலனியில் வசித்து வருபவர் நாகபூஷணம். இவரது மனைவி பார்வதி, 49. கடந்த 14ம் தேதி நாகபூஷணம் இருசக்கர வாகனத்தில், மனைவியை ஏற்றிக் கொண்டு மணவாளநகரில் இருந்து வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
சீத்தஞ்சேரியில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் நிரப்புவதற்காக, மனைவி பார்வதியை சாலையோரம் இறக்கி விட்டு சென்றார்.
அப்போது, அவ்வழியே வந்த வேன் பார்வதி மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த பார்வதி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பென்னலுார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.