நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: கொடுங்கையூர் முத்தமிழ் நகர் பகுதியை சேர்ந்தவர் பார்வதி, 60. திருமண தரகர். நேற்று மாலை புழல் காவாங்கரை சந்திப்பு அருகே சாலையை கடந்தபோது பார்வதி மீது, அவ்வழியே வந்த லாரி மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே பார்வதி பலியானார்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாராயணன், 24, லாரியை ஓட்டி வந்துள்ளார். அவரை கைது செய்து, மாதவரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.