/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி துவக்கம்: ஓட்டுநர், நடந்துநர் நிம்மதி
/
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி துவக்கம்: ஓட்டுநர், நடந்துநர் நிம்மதி
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி துவக்கம்: ஓட்டுநர், நடந்துநர் நிம்மதி
அரசு பஸ்களில் தானியங்கி கதவுகள் பொருத்தும் பணி துவக்கம்: ஓட்டுநர், நடந்துநர் நிம்மதி
ADDED : மார் 04, 2025 01:02 AM

ஊத்துக்கோட்டை, அரசு பேருந்து பணி மனைகளில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளில், படிக்கட்டு பயணத்தால் ஏற்படும் விபத்தை தவிர்க்க தானியங்கி கதவு அமைக்கும் பணி துவங்கி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பொன்னேரி ஆகிய ஐந்து இடங்களில் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து பணிமனைகள் உள்ளன.
ஊத்துக்கோட்டையில் இருந்து செங்குன்றத்திற்கு 35 பேருந்துகள், திருவள்ளூருக்கு 57, திருத்தணிக்கு 69, பொன்னேரிக்கு 53, என மொத்தம் 214 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஊத்துக்கோட்டையில் இருந்து கோயம்பேடு, செங்குன்றம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, ஆந்திராவின் பிச்சாட்டூர், திருப்பதி, நெல்லுார் உள்ளிட்ட இடங்களுக்கு மொத்தம் 35 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
போதுமான பேருந்துகள் இல்லாததால், நெரிசல் நேரங்களில் படிக்கட்டில் பயணம் செய்வோர், விபத்தை சந்திக்கின்றனர். படிக்கட்டில் பயணிக்கும் பள்ளி, கல்லுாரி மாணவர்களை நடத்துநர், ஓட்டுநர் உள்ளே வரும்படி கூறினாலும், அதை கேட்பது இல்லை.
இதனால் ஊத்துக்கோட்டை - செங்குன்றம் வழித்தடங்களில் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இது போன்ற விபத்துகளின் போது, பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
கடந்த ஒரு மாதத்தில் சூளைமேனி, பெரம்பூர், பாலவாக்கம் ஆகிய இடங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்களின் போது, மூன்று பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இதை தடுக்க, பேருந்துகளுக்கு தானியங்கி கதவு பொருத்தும் பணி துவங்கி உள்ளது. இந்த நடவடிக்கையால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேருந்து, நடத்துநர்கள் கூறும்போது, 'பேருந்துகளுக்கு தானியங்கி கதவு பொருத்தும் பணி நிறைவடைந்தால், படிக்கட்டு பயணம் கட்டுப்படத்தப்பட்டு, அசம்பாவிதங்கள் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.