/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பேருந்து மோதி தொழிலாளி பலி
/
அரசு பேருந்து மோதி தொழிலாளி பலி
ADDED : செப் 07, 2024 10:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கும்மிடிப்பூண்டி:உத்திரபிரதேச மாநிலம், குஷிநகர் பகுதியை சேர்ந்தவர் ரிஷப் ஜெய்ஸ்வால், 32. கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் கிராமத்தில் வசித்தபடி, பெருவாயல் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார்.
ஆரணி சாலையோரம் புதுவாயல் நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அவருக்கு பின்னால், பெரியபாளையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற, மாநகர் அரசு பேருந்து அவர் மீது மோதியது. அதே இடத்தில் அவர் உயிரிழந்தார். வழக்கு பதிந்த கவரைப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.