/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
/
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
ADDED : செப் 12, 2024 09:10 PM
மணவாளநகர்:கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி மணவாளநகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் பிரவீன், 25.
மணல் திருட்டு, கஞ்சா, வழிப்பறி, பாலியல் தொல்லை உட்பட பல வழக்குகளில் தொடர்புடைய இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன் கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் இவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க மணவாளநகர் இன்ஸ்பெக்டர் சத்தியபாமா திருவள்ளூர் எஸ்.பி.,க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் பரிந்துரைபடி மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், பிரவீனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மணவாளநகர் போலீசார், அதற்கான உத்தரவை சென்னை புழல் சிறையில் ஒப்படைத்தனர். இதையடுத்து பிரவீன் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.