ADDED : பிப் 25, 2025 09:44 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருத்தணி:திருத்தணி அருகே, சிறுமியை திருமணம் செய்து பலாத்காரம் செய்த வாலிபர், 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
திருத்தணி அடுத்த, சிறுகுமி இருளர் காலனியைச் சேர்ந்தவர் கண்ணய்யன் மகன் குணா, 20. இவர், கடந்த, 19ம் தேதி, வீரகநல்லுார் பகுதியைச் சேர்ந்த, 14 வயது சிறுமியை ஒருவரை அழைத்துச் சென்று திருமணம் செய்துக் கொண்டார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து, நேற்று குணாவை கைது செய்து, சிறுமியையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
பின், சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தும், சிறுமியை திருமணம் செய்து் கொண்டு, பலாத்காரம் செய்ததற்காக குணாவின் மீது, 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின், புழல் சிறையில் குணாவை அடைத்தனர்.