/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சிறுமி பலாத்காரம் வழக்கு வாலிபருக்கு ஆயுள் சிறை
/
சிறுமி பலாத்காரம் வழக்கு வாலிபருக்கு ஆயுள் சிறை
ADDED : மார் 02, 2025 12:12 AM

செங்கல்பட்டு, சிறுமிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, செங்கல்பட்டு 'போக்சோ' நீதிமன்றம், நேற்று தீர்ப்பளித்தது.
சென்னை கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி, 2019 செப்., மாதம், வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது, சென்னை செம்மஞ்சேரியைச் சேர்ந்த அரவிந்த், 24, என்பவர், சிறுமி வீட்டிற்குச் சென்று, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து,சுயநினைவு இழந்த போது பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி கிண்டி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அரவிந்தை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில், நீதிபதி நசீமா பானு முன்னிலையில் நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் லட்சுமி ஆஜரானார்.
இந்த வழக்கில் குற்றச்சாட்டுநிரூபிக்கப்பட்டதால், அரவிந்துக்கு ஆயுள் தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி நசீமா பானு, நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்குதமிழக அரசு, 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார்.
அதன் பின்,அரவிந்துக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பரிசோதனை செய்து, புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.