/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
1 கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு எகிறியது
/
1 கிலோ முருங்கைக்காய் ரூ.250க்கு எகிறியது
ADDED : நவ 24, 2024 03:21 AM

கோயம்பேடு,
முருங்கைக்காய் சீசன் முடிந்து வரத்து குறைந்ததால், ஒரு கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையா கிறது.
கோயம்பேடு சந்தைக்கு பெரம்பலுார், ஒட்டன்சத்திரம், தேனி, நெல்லை,உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, முருங்கைக்காய் வரத்து உள்ளது.
ஜனவரி முதல் ஆக., மாதம் வரை, முருங்கைக்காய் சீசன் என்பதால், தினமும் 10 லாரி வரை சந்தைக்கு வருவது வழக்கம்.
தற்போது சீசன் முடிந்ததால், முருங்கைக்காய் வரத்து குறைந்து, விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இதையடுத்து, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா பகுதிகளில் இருந்து முருங்கைக்காய் வரத்து உள்ளது.
300 -- 400 டன் தேவையுள்ள இடத்தில் நேற்று, 100 டன் முருங்கைக்காய் மட்டுமே வந்துள்ளது.
இதையடுத்து, கடந்த மூன்று நாட்களுக்கு முன்,கிலோ 160 -- 180 ரூபாய்க்கு விற்பனையான முருங்கைக்காய், நேற்று ஒரு கிலோ, 200 - 250 ரூபாய்க்குவிற்பனையானது.