/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் சமையலர், காப்பாளர் 10 பேர் இடமாற்றம்
/
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் சமையலர், காப்பாளர் 10 பேர் இடமாற்றம்
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் சமையலர், காப்பாளர் 10 பேர் இடமாற்றம்
மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட விடுதிகளில் சமையலர், காப்பாளர் 10 பேர் இடமாற்றம்
ADDED : பிப் 08, 2025 09:14 PM
திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு அரசு கல்லுாரி, 29 பள்ளி மாணவர்கள் தங்கி படிப்பதற்கு வசதியாக பிற்படுத்தப்பட்ட மாணவர் நலவிடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் தற்போது, 2,100 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.
பெரும்பாலான மாணவர்கள் விடுதிகளில் தங்காமல் காலை மற்றும் மதிய வேளையில் விடுதிக்கு வந்து உணவு சாப்பிட்டு வீடுகளுக்கு செல்கின்றனர். ஒரு சில மாணவர்கள் மதிய வேளை மட்டும் வந்து சாப்பிட்டு செல்கின்றனர்.
விடுதி காப்பாளர், சமையலர்கள் துணையுடன் விடுதிகளில் தங்காத மாணவர்களும் தங்கியுள்ளதாக கணக்கு காட்டி கணிசமான வருவாய் ஈட்டி வருகின்றனர்.
மேலும், விடுதிகளில், காப்பாளர்கள் சரியாக பணிக்கு வராமாலும், இரவு நேரத்தில் தங்குவதில்லை. அதே போல, சமையலர்களும் பணிக்கு சரியவாக வராததால் மாணவர்களே சமைத்து சாப்பிட்டும் வந்தனர்.
உதாரணமாக, திருத்தணி அரசினர் கல்லுாரி, 120 மாணவர்கள், கல்லுாரி அருகே உள்ள அரசு பிற்படுத்தப்பட்ட நல விடுதியில் தங்கியுள்ளனர். இங்கு, காப்பாளர், சமையலர்கள் சரியாக பணிக்கு வராததால், மாணவர்களே உணவு தயாரித்து சாப்பிட்டு வந்தனர். உணவு தயாரிக்கும் வீடியோ சமூக வளையதளங்கள் மற்றும் நமது நாளிதழில் செய்தி வெளியானது.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, கல்லுாரி முதல்வர் பூரணசந்திரன் ஆகியோர் விடுதிக்கு சென்று மாணவர்களிடம் விசாரணை நடத்தியதில், காப்பாளர், சமையலர்கள் பணிக்கு வராததும், மாணவர்கள் தயாரித்ததும் உண்மை தெரிந்தது.
இதையடுத்து, மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி அதிரடியாக திருத்தணி விடுதி காப்பாளர், 2 சமையலர்கள் பணியிட மாற்றம் செய்தார்.
மேலும், திருவள்ளூர், கீச்சலம், வங்கனுார் விடுதி காப்பாளர்கள், கனகம்மாசத்திரம், கே.ஜி.கண்டிகை, பாலாபுரம், செங்காட்டனுார் ஆகிய நான்கு விடுதிகளின் சமையலர்கள் என மொத்தம், 10 இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தனி அலுவலர்கள் நியமனம்
இது குறித்து, திருவள்ளூர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
விடுதிகளில் காப்பாளர்கள், சமையலர்கள் மீது தொடர்ந்து மாணவர்கள் புகார் தெரிவித்தனர். மேலும், கோல்மால் நடப்பதும் தெரிய வந்ததும் சில விடுதிகளில் திடீர் ஆய்வு நடத்திய போது தவறு நடந்தது தெரிய வந்தது. முதற்கட்டமாக நேற்று முன்தினம், 10 ஊழியர்களை இடமாற்றம் செய்துள்ளோம்.
மேலும், விடுதிகளில் பணிபுரியும் காப்பாளர்கள், சமையலர்கள், துப்புரவு ஊழியர்கள் மற்றும் இரவு காவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, விடுதிகளில் கட்டாயம் தங்கி பணிபுரிய வேண்டும் என, அறிவுறுத்தி உள்ளோம். மேலும் விடுதிகளின் செயல்பாடுகள் குறித்து கண்டறிய தனி அலுவலர்கள் நியமித்து உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.